தமிழக சட்டமன்றத்தில் நாளை (ஜூன் 29) மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா கொண்டுவரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 28) தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசி வருகிறோம்.
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதில்லை.
இதுபோன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளை கடுமையாக்கி இக்குற்றங்களை முற்றிலும் தடுக்க, முதற்கட்டமாக தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-இல் திருத்த மசோதா நாளை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.
காவல்துறை மானியக்கோரிக்கை மீது முதல்வர் ஸ்டாலின் நாளை பதிலளிக்கிறார். இதனை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடைகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ரூ.2100 கோடி கடன் : டி.ஆர்.பி ராஜா அறிவிப்பு!