அமலாக்கத்துறை சோதனை எதிர்பார்த்த ஒன்று தான். இன்னும் கொடுமைகள் நடக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விட்டு இன்று இரவு 9.30 மணியளவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இந்தியாவினுடைய ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டம், மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, ஏழை எளிய மக்களின் நலன் மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.
மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம். பாட்னாவில் 15 கட்சிகளும் பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில் 26 கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். பாட்னாவிலும் பெங்களூருவிலும் நடைபெற்ற கூட்டத்தால் எனக்கு மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது. இந்த கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும். 2024-ஆம் ஆண்டு புதிய இந்தியா உருவாகும்” என்றார்.
அமலாக்கத்துறை சோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “இது எதிர்பார்த்த ஒன்று தான். போக போக இன்னும் பல கொடுமைகள் நடக்கும். அதையும் சந்திக்க தயாராக உள்ளோம். என்டிஏ கூட்டணியில் இருப்பவர்களை அமலாக்கத்துறை கண்டும் காணாமல் உள்ளனர்” என்றவரிடம்
திமுக ஊழல் கட்சி என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டிள்ளது குறித்த கேள்விக்கு, “பிரதமர் ஊழல்வாதிகள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்களை அருகில் வைத்து இன்று என்டிஏ கூட்டம் நடத்தியுள்ளார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
NDA கூட்டணிக்கு மோடி புது விளக்கம்!
கலைஞர் மகளிர் உரிமை திட்டம்: விண்ணப்பப்பதிவு முகாம் எப்போது?
