திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினின் அமெரிக்க பயணத்திற்கு முன்பாக அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்ற செய்திகள் அமைச்சர்கள் வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பரவலாக விவாதிக்கப்பட்டது.
இந்தசூழலில், அமெரிக்க பயணம் மேற்கொள்ளவதற்கு முன்பாக ஆகஸ்ட் 27 அன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலினிடம், அமைச்சரவை மாற்றம் இருக்குமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “மாற்றம் ஒன்றே மாறாதது.Wait and See” என்று ஸ்டாலின் பதிலளித்தார்.
இந்தநிலையில், அமெரிக்க பயணம் முடித்துக்கொண்டு இன்று சென்னை வந்த ஸ்டாலினிடம், அமைச்சரவை மாற்றம் இருக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஸ்டாலின், “திமுக என்பது சொன்னதை தான் செய்வோம், செய்வதை தான் சொல்வோம். திமுகவின் 75 ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி, பவள விழா கொண்டாடப்பட இருக்கிறது. அதனால், நிச்சயமாக உறுதியாக நீங்கள் எதிர்பார்க்கும் சூழல் உருவாகும் என்று நம்புகிறேன்” என தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அன்னபூர்ணா விவகாரம்: வெட்கப்பட வேண்டிய ஒன்று… நிர்மலா சீதாராமனை சாடிய ஸ்டாலின்