சாதிவாரிக் கணக்கெடுப்பு… தடை போடும் பாஜக – சமூக நீதி மாநாட்டில் ஸ்டாலின் காட்டம்!

Published On:

| By Selvam

மக­ளிர் இட­ஒ­துக்­கீட்­டைத் தடுத்து, சதி செய்த மாதி­ரியே, சாதி­வா­ரிக் கணக்­கெ­டுப்பை நடத்­த­வும் பாஜக அரசு முன்­வ­ர­வில்லை என்று முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் மூன்றாவது தேசிய இணைய மாநாட்டில், ஸ்டாலின் நேற்று (டிசம்பர் 3) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டார்.

இம்மாநாட்டில், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா,

சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்திரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் ஸ்டாலின் பேசியபோது,

அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தில் திருத்­தம்!

சமூக நோய்களை முறிக்­கும் மருந்தே, ‘சமூ­க­நீதி’. சமூ­க­நீ­தியைஅடை­ய­வேண்­டும் என்­பது தனிப்­பட்ட ஒரு மாநி­லத்­தின் எண்­ணமோ, இந்­தி­யா­வின் பிரச்­சி­னையோ அல்ல. எங்­கெல்­லாம் புறக்­க­ணிப்பு ஒதுக்­கு­தல் தீண்­டாமை அடி­மைத்­த­னம் அநீதி இருக்­கி­றதோ, அங்­கெல்­லாம் சமூக நோய்­களை முறிக்­கும் மருந்­தாக இருப்­ப­து­தான் சமூ­க­நீதி.

சமூ­க­ரீ­தி­யாக, கல்­வி­ரீ­தி­யாக புறக்­க­ணிக்­கப்­பட்­டவர்­களை கைதூக்கிவிடு­வ­து­தான், சமூ­க­நீதி. சமூ­க­ரீ­தி­யா­க­வும், கல்வி ரீதி­யா­க­வும் பின்­தங்­கி­ய­வர்­கள் என்­ப­து­தான் அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் சமூ­க­நீதி வரை­யறை.

இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் 340–ஆவது பிரி­வில் ‘socially andeducationally’ என்­ப­து­தான் வரை­ய­றை­யாக இருக்­கி­றது. அதே சொல்­தான் அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் திருத்­தத்­தி­லும் சொல்­லப்­பட்­டது.

அதா­வது சமூ­க­நீதி எனப்­ப­டும் இட­ ஒ­துக்­கீடு என்­பதே சமூ­க­ரீ­தி­யா­க­வும், கல்வி ரீதி­யா­க­வும் பின்­தங்­கி­ய­வர்­க­ளுக்­குத் தரப்­ப­ட­வேண்­டும் என்­ப­து­தான் இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்ட வரை­யறை.

இந்­தியா முழு­மைக்­கும் பரவிய திரா­விட இயக்­க கருத்தியல்!

இந்­தத் திருத்­தத்­திற்கே கார­ணம், அன்­றைய சென்னை மாகா­ணம்­தான். இந்­தத் திருத்­தத்­திற்­குக் கார­ண­மான தலை­வர்­கள் ­தான் பெரி­யா­ரும், அண்ணாவும்.

“சமு­தா­யத்­தி­லும், கல்­வி­யி­லும் பிற்­ப­டுத்­தப்­பட்­ட­ வ­ராக இருக்­கும் எந்­தச் சமூ­கத்­த­வர்க்­கும் செய்­யும் சலு­கை­க­ளை­யும் அர­சி­யல் சட்­டத்­தின் எந்­தப் பிரி­வும் தடுக்­காது” என்­ப­து­தான் அர­சி­யல் அமைப்­புச் சட்­டத்­தில் செய்­யப்­பட்ட முத­லா­வது திருத்­தம்.

இந்த திருத்­தத்­திற்­குக் கார­ணம், “happenings in madras தான்” என்று நாடா­ளு­மன்­றத்­தி­லேயே கூறி­னார் அன்­றைய பிர­த­மர் நேரு.

சென்னை மாகா­ணத்­தில் ஆட்­சியை கைப்­பற்­றிய நீதிக்­கட்­சி­யின் ஆட்­சி­யில், 1922–ஆம் ஆண்டு, அன்­றைய முத­ல­மைச்­சர் பன­கல் அர­சர் வகுப்­பு­வா­ரிப் பிர­தி­நி­தித்­துவ உரிமை ஆணை­யைப் பிறப்­பித்­தார்.

அது­தான் இன்­றைக்கு வரைக்­கும் தமிழ்­நாட்­டில் தொடர்­கி­றது. தமிழ்­நாட்டை பார்த்து பல்­வேறு மாநி­லங்­கள் சமூ­க­நீ­தியை வழங்கி வரு­கி­றது. தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு சமூ­க­நீதி வழங்­கி­ய­தோடு, இந்­தி­யா­வின் மற்ற மாநில ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கும், அத்­த­கைய உரிமை கிடைக்க வழி­காட்­டி­ய­தும் திரா­விட இயக்­கம்­தான். இந்­தக் கருத்­தி­யல்­தான் இன்­றைக்கு அகில இந்­தியா முழு­மைக்­கும் பரவி இருக்­கி­றது.

ஆனால், சமூ­க­நீ­தியை பாஜக முறை­யாக அமல்­ப­டுத்­து­வது இல்லை. கடந்த பத்­தாண்டு காலத்­தில் மத்திய அர­சின் துறை­க­ளில், பிற்­ப­டுத்­தப்­பட்­டோ­ருக்­கான 27 விழுக்­காடு ஒதுக்­கீடு முழு­மை­யாக வழங்­கப்­ப­ட­வில்லை.

மக­ளிர் இட­ஒ­துக்­கீட்டுக்கு முட்டுக்கட்டை போடும் பாஜக

ஏழை எளிய, பிற்­ப­டுத்­தப் பட்ட, பட்­டி­ய­லின, பழங்­கு­டி­யின மக்­கள் முன்­னே­று­வதை பாஜக விரும்­ப­வில்லை. அத­னால்­தான், அவர்­கள் சமூ­க­நீ­திக்கு எதி­ராக இருக்­கி­றார்­கள். இட­ஒ­துக்­கீட்­டில், பொரு­ளா­தார அள­வு­கோலை நுழைக்­கத் துடிக்­கி­றார்­கள்.

ஏழை எளிய மக்­க­ளுக்கு பொரு­ளா­தார உதவி செய்­வதை நாங்­கள் தடுக்­க­வில்லை. ஆனால், சமூ­க­ரீ­தி­யா­கப் பின்­தங்­கி­ய­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டிய இட­ஒ­துக்­கீட்டை, பொரு­ளா­தார அள­வு­கோலை மட்­டுமே அடிப்­ப­டை­யாக வைத்­து­விட்டு பொதுப்­பி­ரி­வி­ன­ருக்­கும் வழங்­கு­வ­தைத்­தான் எதிர்க்­கி­றோம்.

எப்­படி பாஜக, பட்­டி­ய­லின, பழங்­கு­டி­யின, பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­க­ளுக்கு விரோ­த­மான கட்­சியோ, அதே­போன்று பெண்­க­ளுக்­கும் விரோ­த­மான கட்­சி­தான். அத­னால்­தான், பெண்­க­ளுக்கு அர­சி­யல் அதி­கா­ரம் வழங்­கும் மக­ளிர் இட­ஒ­துக்­கீடு மசோ­தாவை கிடப்­பில் போட்டு வைத்­தி­ருக்­கி­றார்­கள்.

மக­ளிர் இட­ஒ­துக்­கீடு சட்­டத்தை, ஒரே ஒரு கட்­சியை தவிர, மக்­க­ள­வை­யி­லும், மாநி­லங்­க­ள­வை­யி­லும் இருந்த எல்லா கட்­சி­க­ளும் ஆத­ரித்து வாக்­க­ளித்­தார்­கள். எந்த முக்­கி­யக் கட்­சி­யும் எதிர்த்து வாக்­க­ளிக்­க­வில்லை. ஆனால், அது செயல்­பாட்­டிற்கு வந்­து­வி­டக்­கூ­டாது என்ற தடையை பாஜகவே அந்த சட்­டத்­திற்­குள் ஷரத்­துக்­க­ளாக எழுப்­பி­யது. அதை வைத்து தொகுதி மறு­வ­ரை­ய­றை­கள் முடிந்த பிறகு  மக­ளி­ருக்கு 33 விழுக்­காடு தரு­வோம் என்று சொன்­னார்­கள்.

பெண்­ணு­ரி­மைத் தீர்­மா­னங்­கள் !

மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்­பும், தொகுதி வரை­ய­றை­யும் முடிந்த பிறகு என்­றால் 2029–ஆம் ஆண்­டுக்­குப் பிற­கு­தான், 33 விழுக்­காடு இட­ஒ­துக்­கீடு பெண்­க­ளுக்கு கிடைக்­கும். 2029–ஆம் ஆண்டு அதா­வது இன்­னும் 6 ஆண்­டு­கள் கழித்து நிறை­வே­றப்­போ­கும் சட்­டத்தை இப்­போதே நிறை­வேற்­றி­விட்­ட­தாக கணக்­குக் காட்­டி­யது பாஜக அரசு. சட்­டத்­தைக் கொண்­டு­வந்த பா.ஜ.க., தடை­யை­யும் போட்­டி­ருக்­கி­றது!

1996–ஆம் ஆண்டு, 2010–ஆம் ஆண்டு கொண்டு வரப்­பட்ட சட்­டங்­க­ளில் இது மாதி­ரி­யான தடை சுவர்­கள் இல்லை. அப்­படி என்­றால், இப்­போது இந்­தத் தடை­களை உரு­வாக்­கி­யது யார்? இந்த சட்­டத்தை கொண்டு வந்த பாஜகவே தடை­யை­யும் போட்­டி­ருக்­கி­றது.

1929–ஆம் ஆண்டு செங்­கல்­பட்­டில் நடந்த சுய­ம­ரி­யாதை மாநாட்­டில்­தான், பெண்­க­ளுக்­குச் சொத்­து­ரிமை, பணி­யு­ரிமை, மறு­ம­ணம் செய்­து­கொள்­ளு­தல் உள்­ளிட்ட பல்­வேறு புரட்­சி­க­ர­மான பெண்­ணு­ரி­மைத் தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன.

அதன் தொடர்ச்­சி­யா­கத்­தான், திமுக அர­சில் பெண்­க­ளின் நலன் சார்ந்த பல்­வேறு அடுக்­க­டுக்­கான திட்­டங்­கள் தீட்­டப்­பட்டு, செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது.

எந்­தக் கொள்­கை­யைக் கூறி­னோமோ, அதை சட்­ட­பூர்­வ­மா­கச் செய­லாக்கி வரும் அர­சு­தான், திமுக அரசு.

மக­ளிர் இட­ஒ­துக்­கீட்­டைத் தடுத்து, சதி செய்த மாதி­ரியே, சாதி­வா­ரிக் கணக்­கெ­டுப்பை நடத்­த­வும் பாஜக அரசு முன்­வ­ர­வில்லை.

சாதி­வா­ரிக் கணக்­கெ­டுப்பை மத்திய அரசு உடனே நடத்த வலி­யு­றுத்தி தமிழ்­நாடு சட்­ட­ச­பை­யில் நாம் தீர்­மா­னம் நிறை­வேற்றி இருக்­கி­றோம்.

சாதி­வா­ரிக் கணக்­கெ­டுப்பு!

இந்­திய மக்­கள் அனை­வ­ருக்­கும் கல்வி, பொரு­ளா­தா­ரம், வேலை­வாய்ப்பு ஆகி­ய­வற்­றில் சம உரிமை மற்­றும் வாய்ப்பு கிடைப்­பதை உறு­தி­செய்­யும் வகை­யில் திட்­டங்­க­ளைத் தீட்டி, சட்­டங்­கள் இயற்ற சாதி­வாரி மக்­கள்­தொ­கைக் கணக்­கெ­டுப்பு அவ­சி­யம்.

2021–ஆம் ஆண்டே எடுக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டிய மக்­கள்­தொ­கைக் கணக்­கெ­டுப்பை மத்திய பாஜக அரசு உடனே தொடங்­க­வேண்­டும். அதோடு இணைத்து சாதி­வா­ரிக் கணக்­கெ­டுப்­பை­யும் நடத்­த­வேண்­டும்.

இதைச் செயல்­ப­டுத்த பாஜக அரசு மறுக்­கி­றது. சாதி­வா­ரிக் கணக்­கெ­டுப்பு நடத்­தி­னால், அதை வைத்து உண்­மை­யான சமூ­க­நீ­தியை வழங்­க­வேண்­டும் என்­று­தான் தயங்­கு­கி­றார்­கள்.

சாதி­வா­ரிக் கணக்­கெ­டுப்பை எடுக்க மறுப்­பது மூல­மாக சமூ­க­நீ­திக்­கும், மக­ளிர் இட­ஒ­துக்­கீட்டு சட்­டத்தை தள்­ளிப் போட்­ட­தால் பெண்­ணு­ரி­மைக்­கும் எதி­ராக இருக்­கி­றது இந்த பாஜக அரசு.

இதற்கு எதி­ராக நாம் அனை­வ­ரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்­க­வேண்­டும்!

•பட்­டி­ய­லின மக்­க­ளின் இட­ஒ­துக்­கீடு முறை­யாக வழங்­கப்­ப­ட­வேண்­டும்.

•பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் இட­ஒ­துக்­கீடு முறை­யாக வழங்­கப்­ப­ட­வேண்­டும்.

•சிறு­பான்­மை­யி­னர் இட­ஒ­துக்­கீடு முறை­யாக வழங்­கப்­ப­ட­வேண்­டும்.

•நீதித்­து­றை­யில் இட­ஒ­துக்­கீடு செயல்­பாட்­டிற்கு வர­வேண்­டும்.

•இதர பிற்­ப­டுத்­தப்­பட்ட, பட்­டி­ய­லின, பழங்­கு­டி­யின சமு­தா­யத்­தி­ன­ருக்கு, பதவி உயர்­வில் இட­ஒ­துக்­கீடு உறுதி செய்­யப்­ப­ட­வேண்­டும்.

•சாதி­வாரி கணக்­கெ­டுப்பை ஒன்­றிய அரசு நடத்தி, அதன் தர­வு­களை வெளி­யி­ட­வேண்­டும்.

இதை­யெல்­லாம் அகில இந்­திய அள­வி­லும், மாநி­லங்­கள் அள­வி­லும் கண்­கா­ணிக்க வேண்­டும். சமூ­க­ரீ­தி­யா­க­வும் கண்­கா­ணிக்­க­வேண்­டும்.

•தமிழ்­நாட்­டில் திமுக ஆட்­சிக்கு வந்­த­தும், ஆதி­தி­ரா­வி­டர் பழங்­கு­டி­யி­னர் ஆணை­யத்தை அமைத்­தது. சமூ­க­நீதி ஆணை­யத்தை அமைத்­தது. சமூ­க­நீதி கண்­கா­ணிப்­புக் குழுவை அமைத்­தது. இந்­தக் கண்­கா­ணிப்­புக் குழு, கல்வி, வேலை­வாய்ப்பு, பத­வி­கள், பதவி உயர்­வு­கள், நிய­ம­னங்­கள் ஆகி­ய­வற்­றில் சமூ­க­நீதி அள­வு­கோல், முறை­யாக, முழு­மை­யாக பின்­பற்­றப்­ப­டு­கி­றதா என்­ப­தைக் கண்­கா­ணித்து வரு­கி­றது.

இதே­போன்று அனைத்து மாநி­லங்­க­ளி­லும் குழுக்­கள் அமைக்­கப்­ப­ட­வேண்­டும்.

•சமூக நீதி – Social Justice

•மதச்­சார்­பற்ற அர­சி­யல் – Secular Politics

•சம­தர்­மம் – Socialism

•சமத்­து­வம் – Equality

•மாநில சுயாட்சி – State Autonomy

•கூட்­டாட்­சிக் கருத்­தி­யல் – Federalism – இவை உயிர்­வா­ழும் இந்­தி­யாவே, இணை­யற்ற இந்­தியா!

எனவே, இத்­த­கைய கருத்­தி­யல்­களை நாம் ஒன்றுசேர்ந்து முன்­னெ­டுக்­க­வேண்­டும். சமூ­க­நீதி இந்­தி­யாவை உரு­வாக்க சம­தர்ம இந்­தி­யாவை உரு­வாக்க சகோ­த­ரத்­துவ இந்­தி­யாவை உரு­வாக்க நாம் அனை­வ­ரும் இணைந்து போராட வேண்­டும் என்று முதல்­வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சோளம் கம்பு பூண்டு ரொட்டி

திருவண்ணாமலை மகா தீபம் ஏற்பாடுகள் : அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share