விதை நாங்க போட்டது: 15,000 ஓபிசி மாணவர்களுக்கு மெடிக்கல் சீட்… ஸ்டாலின் ஹாப்பி!

Published On:

| By Selvam

திமுக அரசு நடத்திய சமரசமற்ற சட்டப்போராட்டத்தால், கடந்த மூன்று ஆண்டுகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி மாணவர்களுக்கு 15,066 மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 29) பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி மாணவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீண்ட சட்டப்போரட்டத்திற்கு பிறகு மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி மாணவர்களுக்கு 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை 29-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியாகி மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுவதும் உள்ள 15,066  ஓபிசி மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் படித்துள்ளார்கள் என்று வில்சன் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனை மேற்கொள் காட்டி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

“திமுக அரசு நடத்திய சமரசமற்ற சட்டப்போராட்டத்தால், கடந்த மூன்று ஆண்டுகளில் ஓபிசி மாணவர்களுக்கு 15,066 மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன என்ற செய்தியை பகிர்ந்துகொள்வதில், பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பு  இந்த குறிப்பிடத்தக்க சாதனையின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இந்தியா முழுவதும் ஓபிசி ரிசர்வேஷன் குறித்து பல ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு வழிவகுத்தது.

நாங்கள் நிறைவேற்ற வேண்டிய பணிகள் நிறைய இருப்பினும், பின்தங்கிய சமூகங்களின் விகிதாச்சாரத்தை அடையாளப்படுத்தவும், சமூக நீதியை நிலைநாட்ட நமது உரிமையான பங்கைப் பெறவும் மத்திய அரசு சாதிவாரிக்கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதே எங்களது உடனடி கோரிக்கையாக உள்ளது. இந்த இலக்கை அடைய நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…  

மோடி அரசின் முடிவு: வரவேற்கும் துரை வைகோ

பொதுமக்களின் புகாருக்கு உடனடி தீர்வு… அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share