ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: மீண்டும் தாக்கல் செய்த முதல்வர்

Published On:

| By Selvam

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 23) மீண்டும் தாக்கல் செய்தார்.

முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து பேசியபோது, “மிகவும் கனத்த இதயத்தோடு இந்த சட்டமன்ற பேரவையில் நான் நின்று கொண்டிருக்கிறேன். ஆன்லைன் சூதாட்டத்தால் 41 பேர் தற்கொலை செய்துகொண்ட துயரமான நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாண்புமிகு உறுப்பினர்கள் பார்வைக்கு மீண்டும் வைக்கப்படுகிறது. ஆளுநர் ஒப்புதலுக்கு மீண்டும் அனுப்பப்படும். மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ADVERTISEMENT

இந்த சட்டம் அறிவால் மட்டும் அல்ல இதயத்தால் உருவாக்கப்பட்டது. மக்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்தவும், நெறிப்படுத்தவும், காக்கவும் மாநில அரசிற்கு உரிமை உண்டு” என்று தெரிவித்தார்.

செல்வம்

ADVERTISEMENT

தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அச்சுறுத்தல்!

அண்ணாமலை அவசர டெல்லி பயணம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share