அன்னபூர்ணா விவகாரம்: வெட்கப்பட வேண்டிய ஒன்று… நிர்மலா சீதாராமனை சாடிய ஸ்டாலின்

Published On:

| By Selvam

ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பியதற்காக கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டார்.

இந்த விவகாரம் தேசிய அளவில் முக்கிய பேசுபொருளானது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசியபோது, “ஜிஎஸ்டி குறித்த தொழில்முனைவோர்களின் நியாயமான கோரிக்கைகளை சீனிவாசன் முன்வைத்தார். அதனை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் என்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய ஒன்று. மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

செல்வம் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

7,618 கோடி முதலீடு, 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு: சென்னை திரும்பிய ஸ்டாலின் பேட்டி!

“இங்க வாழ்றதுக்கே அதிகாரம் தேவை”… ‘நந்தன்’ ட்ரெய்லரில் தெறிக்கும் வசனங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share