இலங்கை அரசிடம் உள்ள கச்சத்தீவை திரும்ப பெற மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி, சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 2) தனித்தீர்மானம் கொண்டு வருகிறார். stalin proposed resolution katchatheevu
தமிழக சட்டமன்றத்தில் ஒவ்வொரு துறை சார்ந்த மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் கால்நடை பராமரிப்பு, மீன்வளத்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற உள்ளது.
இந்தநிலையில், கச்சத்தீவை மீட்பது தொடர்பான தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் முன்மொழிகிறார்.
இந்த தீர்மானத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழ்நாடு மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை போக்கிட கச்சத்தீவை மீட்பது தான் ஒரே வழி.
கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பிரதமர் மோடி இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்துகிறார். அனைத்து சட்டமன்ற குழு தலைவர்களின் விவாதத்திற்கு பிறகு, இந்த தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடத்தி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
கடந்த மார்ச் 27-ஆம் தேதி சட்டமன்றத்தில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு பாஜக தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. stalin proposed resolution katchatheevu