டெல்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று (மே 24) நடைபெற்றது. mk stalin meets pm modi in delhi
இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் போது பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் தனியாக சந்தித்து பேச நேரம் கேட்டிருப்பதாக நேற்று (மே 23) டிஜிட்டல் திண்ணையில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தநிலையில், கூட்டம் முடிந்தபிறகு பிரதமர் மோடியை ஸ்டாலின் 5 நிமிடங்கள் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, பி.எம்.ஸ்ரீ திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும், மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்ததாக தெரிகிறது.
தலைநகர் டெல்லியில், பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. mk stalin meets pm modi in delhi