மருத்துவமனையில் தாயாரை நலம் விசாரித்த ஸ்டாலின்

Published On:

| By Selvam

முதல்வர் ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயார் தயாளு அம்மாளின் உடல்நலன் குறித்து மருத்துவர்களிடம் இன்று (மார்ச் 4) கேட்டறிந்தார். Mk Stalin meets Dhayalu Ammal

கோபாலபுரம் இல்லத்தில் வசித்துவரும் 92 வயதான தயாளு அம்மாளுக்கு நேற்று (மார்ச் 3) இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், உடனடியாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று தயாளு அம்மாளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும் தயாளு அம்மாள் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

இந்தநிலையில், இன்று இரண்டாவது நாளாக முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று தாயாருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மூத்த மகனான மு.க.அழகிரியும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். இதனையடுத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் இன்று மதியம் மருத்துவமனைக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Mk Stalin meets Dhayalu Ammal

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share