தொழிலாளர் அணியோடு எனக்கு எப்போதும் நட்பு கலந்த ஒரு மோதல் உண்டு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுக்குழு மற்றும் பொன் விழா மாநாடு கடந்த இரண்டு நாட்களாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வந்தது. இறுதி நாளான இன்றைய நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, “சிந்தனை சிற்பி சிங்காரவேலர் 1923-ஆம் ஆண்டு மே நாளை கொண்டாடியதை தொடர்ந்து இந்த ஆண்டு மே நாள் நூற்றாண்டை கொண்டாடுகிறோம்.
அத்தகைய நூற்றாண்டில் திமுகவின் துணை அமைப்பான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் பொன் விழா காண்பது நமக்கெல்லாம் பெருமை கொள்ளக்கூடிய ஒன்றாக அமைந்துள்ளது.
தொழிலாளர் அணியோடு எனக்கு எப்போதும் நட்பு கலந்த ஒரு மோதல் உண்டு. எந்த மோதலாக இருந்தாலும் நான் எப்போதும் உங்களோடு தான் இருப்பேன்.
சாதிய ரீதியாக அடக்கப்பட்ட மக்கள் அனைவரும் தொழிலாளர்கள் என்று கூறியவர் தந்தை பெரியார். அதனால் தான் திராவிட விவசாயிகள் சங்கம் என்ற அமைப்பை துவங்கினார்.
அந்த வழித்தடத்தில் தான் தொழிற்சங்கத்தை உருவாக்க வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா கூறினார். அதன்பேரில் தான் தொழிலாளர் முன்னேற்ற சங்க அமைப்பை 1970-ஆம் ஆண்டு கலைஞர் துவங்கி வைத்தார்.
2001-ஆம் ஆண்டு முதல் தொமுச பொதுச்செயலாளர் பொறுப்பை சண்முகம் ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகளின் செயல்பாட்டினால் தான் பேரவைக்கு ஒன்றிய அரசு அங்கீகாரம் கிடைத்தது.
தொமுச நடவடிக்கையால் இந்தியாவில் 19 மாநிலங்களில் இணைப்பு சங்கங்கள் உருவாகியுள்ளது.
ரத்தம் சிந்தி போராடி உயிர்த்தியாகம் செய்த தொழிலாளர்களின் உரிமை வரலாற்றை நினைவு கூறக்கூடிய வகையில் 1969-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறையை கலைஞர் அறிவித்தார்.
தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போது அரசு ஊழியர்களை போல பணிக்கொடை வழங்கும் திட்டத்தை திமுக அரசு அறிமுகப்படுத்தியது.
தொழில் விபத்து நிவாரண உதவி, கட்டுமான தொழிலாளர், மீனவர், தூய்மை பணியாளர் நலவாரியம் என 36 நல வாரியங்களை திமுக அரசு தான் உருவாக்கியது. அந்த வகையில் தான் நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.
அமைப்பு சாரா தொழிலாளர்களின் 6 முதல் 9 வரை படிக்கும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 கல்வி உதவி தொகை,
கடை மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தர சட்டத்திருத்தம்,
இரண்டு ஆண்டுகளில் 6 லட்சத்து 71 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செல்வம்
கள்ளச்சாராய மரணம்: ஆர்ப்பாட்டத்தை அறிவித்த பாஜக!
ஜெயம் ரவியை இயக்கும் கிருத்திகா உதயநிதி?

