ராசாத்தி அம்மாளை நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By christopher

ஜெர்மனியில் சிகிச்சை முடிந்து, சென்னை திரும்பிய ராசாத்தி அம்மாளை, முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவு (செப்டம்பர் 12) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் சென்னை சிஐடி காலனியில் தமது மகளும், திமுக எம்பியுமான கனிமொழியுடன் வசித்து வருகிறார். அவருக்கு சில ஆண்டுகளாக அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் திடீரென உடல்நிலை சரியில்லாமல் சென்றதை அடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு வயிற்று வலி, அஜீரண கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

மேல் சிகிச்சைக்காக ஜெர்மனியில் உள்ள பிரபல ஃபோர்ன் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

இதனையடுத்து கடந்த மாதம் 24ம்தேதி தனது மகள் கனிமொழியுடன், ராசாத்தி அம்மாள் ஜெர்மனிக்கு சென்றார்.

சிகிச்சை நிறைவு பெற ஒருமாத காலம் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் 20 நாட்களிலேயே தற்போது அவர் வீடு திரும்பியுள்ளார்.

நேற்று காலை சென்னை விமானநிலையத்திற்கு வந்த ராசாத்தி அம்மாளை திமுக எம்.பி டி.ஆர்.பாலு வரவேற்றார். இதனையடுத்து சென்னை சிஐடி காலனியில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வரும் ராசாத்தி அம்மாளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

கலைஞருக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மரியாதை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share