கோடை காலத்தில் நீலகிரியின் அழகை ரசிக்க வரும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் கோடை விழாக்கள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127-ஆவது மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 15) தொடங்கி வைத்தார். Mk Stalin inaugurates ooty flower show
இந்த நிகழ்ச்சியின் போது திமுக துணை பொதுச்செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த மலர் கண்காட்சியானது இன்று முதல் மே 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.125, சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், புகைப்பட கேமரா எடுத்துச் செல்ல ரூ.100, வீடியோ கேமரா எடுத்துச்செல்ல ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஓரியண்டல் லில்லி, பேன்சி மேரிகோல்டு, ஜினியா, டெல்முனியம், ஜெர்மனியம் சைக்ளோபின் பால்சம், புதிய ரக ஆர்னமெண்டல்கேல் உள்ளிட்ட 275 வகையான செடிகள், மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பூங்காவின் பல்வேறு இடங்களில் 7.50 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டுள்ளன, 45 ஆயிரம் மலர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

பொன்னியின் செல்வன் அரண்மனை, கல்லணை, யானை, அன்னப்பறவை, படகு, கல்லணை, சிப்பாய்கள், ஊஞ்சல் ஆகிய அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. மலர் கண்காட்சியை ஒட்டி நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். Mk Stalin inaugurates ooty flower show