சென்னையில் இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு!

Published On:

| By Selvam

mk stalin inaugurates global investors meeting

சென்னையில் இன்றும் (ஜனவரி 7) நாளையும் (ஜனவரி 8) நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு தொடர்ந்து செயல்திட்டங்களை வகுத்து வருகிறது. அந்தவகையில் முதல்வர் ஸ்டாலின் துபாய், ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.

ADVERTISEMENT

இந்தநிலையில், தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

காலை 10 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் மாநாட்டை துவக்கி வைத்து, ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலருக்கான தமிழ்நாட்டின் பார்வை என்ற ஆய்வறிக்கையை வெளியிடுகிறார்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமை சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்புரையாற்றுகிறார்.

ADVERTISEMENT

30,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், 450 வெளிநாட்டு பிரதிநிதிகள், 50-க்கும் மேற்பட்ட வர்த்தக தொழில் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.

தொழில்துறை சார்ந்த முதலீடுக்கான பல்வேறு நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி மற்றும் பேட்டரி தயாரிக்கும் நிறுவனம் தமிழகத்தில் தொழில் துவங்க ரூ.16,000 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜனவரி 6) அறிவித்தார். அதேபோல சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனங்கள் ரூ.31,000 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள உள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

டான்செட், சீட்டா தேர்வுகள்: அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவிப்பு!

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன்: ஜனவரி 25-ல் வெளியாக காரணம் இதுதான்!

ஹெல்த் டிப்ஸ் : இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share