அரசு திட்டங்கள்… விவசாயிகளை தேடி கிராமத்திற்கு வரும் அதிகாரிகள்!

Published On:

| By Selvam

mk stalin inaugurates door step help for farmers

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, வேளாண் உழவர் நலத்துறையில் ஐந்து தனி நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, அதன்மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் 1,94,076 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. mk stalin inaugurates door step help for farmers

மேலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (மே 29) சென்னை தலைமைச் செயலகத்தில், வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் “உழவரைத்தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை” திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரம், மாணிக்கமங்கலம் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“வேளாண்மை – உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவுத் துறை அலுவலர்கள், பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உடன் சேர்ந்து கிராமங்களுக்கு நேரடியாக சென்று உழவர்களை சந்தித்து, அவர்களின் தேவைகளை அறிந்து, அதற்கான திட்டங்களை வழங்கிட புதிய தொழில் நுட்பங்களை எடுத்துக்கூறிட ஏதுவாக 2025 – 26-ஆம் ஆண்டு வேளாண்மை தனிநிதிநிலை அறிக்கையில் “உழவரைத் தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை” திட்டம் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டம் தமிழ்நாட்டில் உள்ள 17,116 கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் வேளாண்மை விரிவாக்க சேவைகள் மற்றும் அரசின் திட்டங்கள் உழவர்களுக்கு அவர்களுடைய கிராமத்திலேயே வழங்கப்படும்.

மேலும், இத்திட்டத்திற்கான முகாம்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை (2வது மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகளில்) ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள இரண்டு கிராமங்களில் நடத்தப்படும்.

இதன்மூலம் விவசாயிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதுடன் அரசு நலத்திட்ட உதவிகள் அவர்களை விரைவாக சென்றடையும். mk stalin inaugurates door step help for farmers

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு மாதமும் நான்கு கிராமங்கள் வீதம் மொத்தம் மாதந்தோறும் 1,540 கிராமங்களில் ‘உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை’ திட்ட முகாம்கள் நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. mk stalin inaugurates door step help for farmers

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share