சிறுமி டானியா நினைவிருக்கிறதா? – ஸ்டாலின் கொடுத்த பரிசு!

Published On:

| By Selvam

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்ட திருவள்ளூரைச் சேர்ந்த சிறுமி டானியாவின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 4) இலவச வீட்டுமனை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ், சவுபாக்யா தம்பதியனரின் மகள் டானியா அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு பண உதவி கேட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு சிறுமி டானியா கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மேலும், இலவச வீடு கட்டித்தரவும் ஆணையிட்டார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு பூந்தமல்லி அருகே தண்டலம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு முக சீரமைப்பு செய்யப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் சிறுமி டானியா வீடி தேடிச்சென்று அவரை நலம் விசாரித்தார்.

இந்தநிலையில், தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் சிறுமி டானியா குடும்பத்திற்கு திருவள்ளூர் மாவட்டம் ஒன்றியம்பாக்கம் கிராமத்தில் வீடு கட்டிமுடிக்கப்பட்டது.

இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் மாணவி டானியாவின் குடும்பத்திடம் வீட்டு மனைக்கான சாவியை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டானியா, “அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் என்னைப் பலரும் கேலியாக பேசினர். ஆனால், இப்போது என்னிடம் அனைவரும் நன்றாக பழகுகின்றனர். எதிர்காலத்தில் மருத்துவராக வேண்டும் என்பது எனது ஆசை. அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை அளிப்பேன்” என்று தெரிவித்தார்.

செல்வம்

சீமான் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு!

“ED சோதனையில் எதுவும் கைப்பற்றவில்லை” – துரைமுருகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share