திருவள்ளுவர் தினத்தை ஒட்டி இன்று (ஜனவரி 15) சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, சென்னை தலைமை செயலகத்தில் தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு தொண்டாற்றியவர்களுக்கு திருவள்ளுவர் திருநாள் விருதுகளை வழங்கி ஸ்டாலின் சிறப்பித்தார்.
அதன்படி, 2025-ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது புலவர் படிக்காராமு, 2024-ஆம் ஆண்டிற்கான அண்ணா விருது எல்.கணேசன், பாரதியார் விருது கவிஞர் கபிலன், பாரதிதாசன் விருது கவிஞர் பொன்.செல்வகணபதி,
திரு.வி.க. விருது மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், கி.ஆ.பெ.விசுவநாதம் விருது எழுத்தாளர் வே.மு.பொதியவெற்பன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருது தொகையாக தலா ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
அதேபோல, பெரியார் விருது திராவிடர் விடுதலை கழக பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன், அம்பேத்கர் விருது விசிக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் ஆகியோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையுடன், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.
கலைஞர் விருது பெறும் முத்து வாவாசிக்கு விருது தொகையாக ரூ.10 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தை மாத நட்சத்திர பலன்கள்: ஹஸ்தம்
அமெரிக்க செனட்டில் தமிழ் பற்றி தீர்மானம்… சம்பவம் செய்த 15 எம்.பி.க்கள்!