ரஜினிகாந்த் பிறந்தநாள்… தலைவர்கள் வாழ்த்து!

Published On:

| By Selvam

நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 12) தனது 74-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் சார்பில், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி நடித்து 1991-ஆம் ஆண்டு வெளியான தளபதி படம் இன்று திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும், கூலி, ஜெயிலர் 2 படங்களின் அப்டேட்டுகள் இன்று வெளியாகும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்

ADVERTISEMENT

எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட நண்பர் ரஜினிகாந்துக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன்.

ADVERTISEMENT

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

தன் தனித்துவமான நடிப்பாற்றலால் உலகளவில் ரசிகர் பட்டாளம் கொண்டவரும், என்றும் பழகுவதற்கு இனியவருமான நண்பர் ரஜினிகாந்துக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

திரையுலக வாழ்வில் பொன்விழா ஆண்டில் உள்ள ரஜினிகாந்த் இன்னும் பல்லாண்டு பூரண உடல் நலத்துடன் ரசிகர்களை மென்மேலும் மகிழ்விக்க வாழ்த்துகிறேன்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

ரஜினிகாந்த் இன்று 75-ஆம் பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

எளிய பின்னணியில் இருந்து வந்து, தனது கடும் உழைப்பாலும், மேன்மையான பண்புகளாலும், இந்தியத் திரையுலகின் அடையாளங்களில் ஒருவராக உயர்ந்திருக்கும், ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, மூன்று தலைமுறைகளை, தனது வசீகரத்தால் கட்டிப் போட்டிருக்கும் ரஜினிகாந்த், மேலும் பல்லாண்டுகள் நலமுடன் ஆரோக்கியத்துடன் வாழ, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

எவரையும் கவர்ந்திழுக்கும் ஈர்ப்புமிக்க நடிப்பாற்றலாலும், தனித்துவமிக்க நடை, உடை, பாவனைகளாலும், நேர்த்தியான உடல்மொழியாலும் மக்கள் மனதை வென்று, இந்தியத் திரையுலகை தமிழ்நாட்டை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த திரை ஆளுமை.

திரைத்துறையில் இருந்த நிற ஆதிக்கத்தை உடைத்துத் தகர்த்து, தனது ஆகச்சிறந்த நடிப்பால் அனைவரையும் தன்வசப்படுத்தி, திரை வானில் மிளிரும் உச்ச நட்சத்திரம், காலங்கடந்தும் ரசிக்கும்படியான நடிப்பினைக் கொடுத்து, மூன்று தலைமுறையினரை மகிழ்வித்த ஆகப்பெரும் திரைக்கலைஞர்.

பணம், புகழ், பெயர், செல்வாக்கு என எல்லாவற்றிலும் உச்சம் தொட்டாலும், அவற்றைத் துளியும் தலைக்கேற்றாது பணிவோடும், திறந்த மனதோடும் எல்லோரையும் அணுகும் தன் நிலை எந்நாளும் மாறாத பெருமகன். ரஜினிகாந்த்துக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

ரஜினிகாந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் 

கனமழை… எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

திரையில் மிகச்சாதாரண மனிதன்… யதார்த்த நடிப்புக்கான சமகால உதாரணம் – காளி வெங்கட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share