பிரதமர் மோடி தலைமையில் டெல்லி பாரத் மண்டபத்தில் நிதி ஆயோக் கூட்டம் இன்று (மே 24) நடைபெற்றது. mk stalin demand 50 percent share
இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பிறகு அனைத்து மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்தக் குழு புகைப்படத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு முதல் வரிசையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. mk stalin demand 50 percent share

இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் மூன்று முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.
1. கடந்த 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்ககூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தினார்கள். ஆனால் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.
ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கான பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவதுதான் முறையானதாக இருக்கும்.
2. ‘P.M.SHRI’ திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், S.S.A. நிதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2024-2025-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய் நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளது. தாமதமின்றி, ஒருதலைப்பட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் இந்த நிதியை விடுவிக்க வேண்டும்.
3. தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளையும், நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்கத் திட்டம் தேவை.
எனவே, காவிரி, வைகை, தாமிரபரணிக்கு புதிய திட்டத்தை உருவாக்கித் தர வேண்டும்.
இந்தத் திட்டங்களுக்கு எல்லாம், ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அவற்றை மாநிலங்கள் தங்களது மொழியில் மொழிபெயர்த்துக் கொள்வார்கள். mk stalin demand 50 percent share