திமுகவின் 23 அணிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

Published On:

| By Kalai

திமுகவின் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட 23 அணி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT

தேர்தல் வியூகங்கள், மக்களை சந்திப்பது, உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுகவும் தாயாராகி வருகிறது. இதையொட்டி திமுக-வின் 23 அணிகளின் நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இந்த ஆலோசனை கூட்டம் இன்று(டிசம்பர் 28)தொடங்கி நடைபெற்று வருகிறது.

கூட்டத்தில் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவரணி உள்ளிட்ட 23 அணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

ADVERTISEMENT

23 அணிகளுக்கு சமீபத்தில்தான் திமுக தலைமை புதிய நிர்வாகிகளை நியமித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

கலை.ரா

கனிமொழி -தயாநிதி மாறன்- அழகிரி : கோபாலபுரம் குடும்பத்துக்குள் நட்டா வீசிய தோட்டா!

கடும்பனி : திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்!

Photo of author
Kalai
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share