பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த மே 12-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். ஐந்து நாட்கள் பயணத்தை முடித்துவிட்டு இன்று (மே 16) சென்னை திரும்பினார். mk stalin confidence dmk
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “ஐந்து நாட்கள் பயணம் மிகச்சிறப்பாக இருந்தது. அதேநேரத்தில் மக்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் எந்த அளவுக்கு வரவேற்பு அளிக்கிறார்கள் என்பதை நீலகிரி மற்றும் இங்கு சுற்றுலா வந்த மக்கள் வெளிப்படுத்தியபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஆளுநர் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் குடியரசு தலைவர் விளக்கம் கேட்டது குறித்து மற்ற மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்துக்களை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு எப்போதுமே மாநில அரசுகள் மீது சர்வாதிகாரப்போக்கை கடைபிடித்து வருகின்றது” என்றார்.
தொடர்ந்து, “2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் எப்படி இருக்கிறது?” என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், “2026 மட்டுமல்ல, 2031, 2036 தேர்தல்களிலும் திமுக ஆட்சி தான் தமிழகத்தில் தொடரும்” என்றார். mk stalin confidence dmk
