அண்மையில் காலமான மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி குடும்பத்தினரை சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மார்ச் 31) ஆறுதல் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 24-ஆம் தேதி ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி சல்பாஸ் பூச்சிக்கொல்லி மாத்திரைகளை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலை முயற்சி செய்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் கோவை கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த கணேசமூர்த்தி, கடந்த மார்ச் 28-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் விடுத்த இரங்கல் அறிவிப்பில், கணேசமூர்த்தி மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாக கவலை தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக ஈரோடு சென்ற ஸ்டாலின், இன்று காலை ஈரோடு குமரவலசு பகுதியில் உள்ள கணேசமூர்த்தி இல்லத்திற்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அப்போது வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு திமுக வேட்பாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டால் வளமுடன் வாழலாம்!
ஈரோடு பிரகாஷை ஆதரித்து ஸ்டாலின் வாக்குசேகரிப்பு: செல்ஃபி எடுக்க குவிந்த கிட்ஸ்!