தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் புறக்கணிப்பு: ஆளுநரை திரும்ப பெற ஸ்டாலின் வலியுறுத்தல்!

Published On:

| By Selvam

சென்னை சேப்பாக்கம் தூர்தர்ஷன் அலுவலகத்தில், இந்தி மாதம் நிறைவு விழா இன்று (அக்டோபர் 18) நடைபெற்றது. ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரியை விடுவித்துவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.

ADVERTISEMENT

இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர். திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?

தமிழ்நாட்டையும் – தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

தமிழ்த்தாய் வாழ்த்தில் தவிர்க்கப்பட்டதா திராவிடம்? – அடுத்த சர்ச்சையில் ஆளுநர்

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share