ஈரோட்டுக்கு ஏன் போகவில்லை? நெல்லையில் மனம் திறந்த ஸ்டாலின்

Published On:

| By Aara

திருநெல்வேலி மாவட்ட திமுக கள ஆய்வு கூட்டம் நேற்று பிப்ரவரி 6-ம் தேதி நடைபெற்றது. இதில் பேசிய திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். mk stalin clarifies campaign

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு ஏன் செல்லவில்லை என்று என்னிடம் சிலர் கேட்டார்கள். அங்கே எதிரியே இல்லாத போது ஏன் செல்ல வேண்டும் என்று தான் நான் அங்கே போகவில்லை.

ADVERTISEMENT

ஆனாலும் நம்முடைய நிர்வாகிகளான முகவர்கள் சுமார் 400 பேரிடம் போனில் பேசினேன். ஒவ்வொருவரிடமும் களம் எப்படி இருக்கிறது என்று விசாரித்து அறிந்து கொண்டேன்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நாம் மிகப்பெரிய வெற்றி பெறப்போகிறோம். வெற்றி பெற்றவுடன் இந்த வெற்றிக்காக பணியாற்றிய அனைத்து பாக முகவர்கள் உட்பட நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல இருக்கிறேன்” என பேசினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பாக முகவர்கள் உள்ளிட்ட 300 பேருக்கும் மேற்பட்ட நிர்வாகிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் அலைபேசியில் உரையாடினார் என்பதை கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி போன் மேல் போன் போட்ட ஸ்டாலின்… சீமான் டெபாசிட் தேறுமா? ஈரோடு கிழக்கு க்ளைமாக்ஸ்! என்ற தலைப்பில் மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் ஏற்கனவே செய்தியாக வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. mk stalin clarifies campaign

Photo of author
Aara
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share