பிரதமர் மோடி தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், 10-ஆவது நிதி ஆயோக் கூட்டம் இன்று (மே 24) டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. MK Stalin attended Niti Aayog meeting
இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல், ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்த ஆண்டு கூட்டத்தின் கருப்பொருளாக ‘விக்சித் பாரத் @2047’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்குவதை இந்த கூட்டத்தின் நோக்கமாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. MK Stalin attended Niti Aayog meeting