ஜி.கே.மணி வீட்டு கல்யாண நிகழ்ச்சியில் ஸ்டாலின்

Published On:

| By vanangamudi

சேலத்தில் பாமக கௌரவ தலைவரும் சட்டமன்ற குழு தலைவருமான ஜி.கே.மணி இல்ல திருமண வரவேற்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 25) கலந்து கொள்கிறார். Stalin attended Mani Family

ஜி.கே.மணியின் முதல் மனைவியின் சகோதரர் தனராஜ் மகன் சேதுநாயக், மணமகள் விமலாம்பிகை திருமண வரவேற்பு நிகழ்ச்சி சேலம் மெய்யனூர் சூரமங்கலம் மெயின் ரோடு ஸ்ரீ வரலக்‌ஷ்மி மஹாலில் இன்று மாலை ஆறு மணிக்கு நடைபெறுகிறது. நாளை காலை 9 மணிக்கு திருமணம் நடைபெறுகிறது.

முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து தனது பேரன் திருமண அழைப்பிதழை ஜி.கே.மணி வழங்கினார். இந்தநிலையில், சேலத்தில் இன்று நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து சேலம் விமான நிலையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். அவரை சுற்றுலாத்துறை அமைச்சர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் திமுகவினர் விமான நிலையத்தில் வரவேற்றனர். அப்போது மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக #FairDelimitationForTN என்ற பதாகையை திமுகவினர் கையில் ஏந்தி ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுத்தனர்.

இதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் விஜய்சேதுபதி, நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஆகியோரும் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். Stalin attended Mani Family

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share