நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்காக குரல் கொடுப்பவர் கனிமொழி: பாராட்டிய ஸ்டாலின்

Published On:

| By Selvam

Mk Stalin appreciate Kanimozhi mp

தூத்துக்குடியில் வியட்நாமைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16,000 கோடி முதலீட்டில் அமைக்க உள்ள மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 25) அடிக்கல் நாட்டினார்.

இதனை தொடர்ந்து மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியபோது,

2024-ஆம் ஆண்டின் முதல் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியை தூத்துக்குடி, திருநெல்வேலியில் இருந்து துவங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

இதில் இன்னும் சிறப்பு என்னவென்றால் என்னுடைய அருமை தங்கை கனிமொழியை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மாவட்டம் தூத்துக்குடி.

நாடாளுமன்றத்தில் கர்ஜனை மொழியாக செயல்பட்டு தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் குரல் கொடுப்பவர் அவர்.

தூத்துக்குடியில் மழை, வெள்ள பாதிப்பு என்று தெரிந்ததும் உடனே இங்கே ஓடோடி வந்து மக்களை காப்பாற்றியதை பார்த்தோம். தங்கை கனிமொழியை போல தூத்துக்குடி மாவட்டத்தின் பெண் சிங்கமாக விளங்கும் கீதா ஜீவன் அவர்களும், அமைச்சராகவும் செயல்வீரராகவும் இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணனும் மக்களுடன் மக்களாக இருந்து மக்களை காப்பாற்றினார்கள்.

அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட பல அமைச்சர்களையும் இங்கே அனுப்பி வைத்தேன். நானும் உடனடியாக இங்கே வந்தது மட்டுமல்லாமல் மீட்பு பணிகள் முடியும் வரை அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் தங்கை கனிமொழி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடமும் தொலைபேசியில் தேவையான அனைத்து நிவாரண பணிகளை உத்தரவிட்டுக்கொண்டு அந்த பணிகளை கண்காணித்து கொண்டிருந்தேன்.

நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளில் ஈடுபட்டார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இரண்டு வாரங்கள் இங்கேயே தங்கி இருந்து உடைந்து போன பாலங்களை சரிசெய்துவிட்டு தான் ஊர் திரும்பினார்.

அமைச்சர் உதயநிதி ஒருவாரம் இங்கு பணியாற்றினார். இப்படி உடனே மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரண பணிகளால் தான் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அடிப்படை வசதிகள் விரைவாக சரிசெய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்கள்” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்த மாடல் பைக்குகள் இனி கிடையாது… ஷாக் கொடுத்த யமஹா நிறுவனம்!

கூட்டணிப் பேச்சுவார்த்தை: ராமதாஸை மீண்டும் சந்தித்த சி.வி.சண்முகம்

ட்ரூ காலர் தேவையில்லை: நெட்வொர்க் நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை!

சர்வதேச வேளாண் கண்காட்சியில் விவசாயிகள் போராட்டம்: எதற்காக?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share