மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நிவாரணப் பணிகளில் ஈடுபட பகுதிவாரியாக அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 4) உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி வில்லிவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர், கே.கே.நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நியமிக்கப்பட்டுள்ளார். வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதியில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர் ஏ.வ.வேலு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல பூந்தமல்லி சுற்றுவட்டாரப்பகுதியில் நிவாரணப்பணிகளில் ஈடுபட அமைச்சர் மூர்த்தி, ஆவடி அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கத்திவாக்கம், மணலி, மாத்தூர், சின்னசேக்காடு மற்றும் எண்ணூர் ஆகிய பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சோழிங்கநல்லூர், பெருங்குடி மற்றும் பெரும்பாக்கம் ஆகிய பகுதியில் நிவாரணப்பணிகளில் ஈடுபட அமைச்சர் சி.வெ. கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல திருவள்ளூர்மாவட்டத்தில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள அமைச்சர் பி. மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நிவாரணப்பணிகளில் ஈடுபட அமைச்சர் அர.சக்கரபாணி, காஞ்சிபுரம் பகுதிகளில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள அமைச்சர் சு. முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல சென்னை மண்டலத்தில் உள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,அமைச்சர் சேகர்பாபு,அமைச்சர் மா.சுப்பிரமணியன்,அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,அமைச்சர் தங்கம் தென்னரசு,மற்றும் அமைச்சர் கே.என்.நேரு, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சண்முகப் பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
