தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 28) முதலமைச்சர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் அரசு ஊழியர்களுக்கான பின் வரும் அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார். MK Stalin announcements government employees
*அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும்.
*அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்புக்கான பணப் பலன் இந்த ஆண்டே வழங்கப்படும். 01-10-2025 முதல் அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன்களை பெறலாம்.
*அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவிகிதம் உயர்த்தப்படுகிறது.
* 3 வகையான ஓய்வூதியங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை செப்டம்பருக்குள் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. குழு செப்டம்பரில் அறிக்கை அளிக்கும்.
*அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி தொழில்நுட்பக் கல்லூரி படிப்புக்காக ரூ.1 லட்சமும், கலை அறிவியல் படிப்புக்கு ரூ.50 ஆயிரமும் முன்பணம் வழங்கப்படும்.
*அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்காலத்தில் தேவை அடிப்படையில் திருமண முன் பணம் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
*பொங்கல் போனஸ் ரூ.500-ல் இருந்து ரூ.1,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* ஓய்வூதியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.MK Stalin announcements government employees
* பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு காலங்கள் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.”
ஆகிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார். MK Stalin announcements government employe
