திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ஸ்டாலின் வெளியிட்ட ஐந்து புதிய அறிவிப்புகள்!

Published On:

| By Selvam

mk stalin announced five announcements

திருப்பத்தூரில் இன்று (ஜூன் 26) நடைபெற்ற அரசு விழாவில் ரூ.174 கோடியில் 90 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து ரூ.68 கோடியில் 60 புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், அண்ணாதுரை உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ஐந்து புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். mk stalin announced five announcements

ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்!

1.பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நெக்னாமலை பகுதியில் 7 கி.மீ நீளத்திற்கு ரூ.30 கோடி செலவில் சாலை அமைக்கப்படும்.

ADVERTISEMENT

2.குமாரமங்கலத்திற்கு ரூ.6 கோடி மதிப்பீட்டில் சீரான மின் விநியோகம் செய்யும் நோக்கில், புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும்.

3. நல்லகுண்டா பகுதியில் ரூ.200 கோடி செலவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட்டு ஐந்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

ADVERTISEMENT

4. திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் ரூ.18 கோடி செலவில் அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்கப்படும்.

5. ஆம்பூர் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.1 கோடி செலவில் புதிய நூலம் அமைக்கப்படும்.

    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
    Join Our Channel
    Share