மு.க.முத்து உடல் தகனம்! – பிரியாவிடை கொடுத்த ஸ்டாலின்

Published On:

| By Kavi

முன்னாள் முதல்வர் கலைஞரின் மகன் மு.க.முத்துவின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. MK Muthu body cremated

முன்னாள் முதல்வர் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக் குறைவு காரணமாக இன்று(ஜூலை 19) காலமானார். முதலில் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து கோபாலபுரத்தில் கலைஞர் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

முதல்வரும் மு.க முத்துவின் தம்பியுமான ஸ்டாலின், மு.க.அழகிரி, தமிழக அமைச்சர்கள், திரை பிரபலங்கள் என பலரும் மு.க.முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்தில் இருந்து க்ரீன்வேஸ் சாலை, அடையாறு வழியாக பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

ADVERTISEMENT

பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு முதல்வரும், மு.க.முத்துவின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். அங்கு இறுதி சடங்கு முடிந்த பின்னர் மு.க.முத்துவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதையடுத்து முதல்வரும் அவரது குடும்பத்தினரும் சோகமாக புறப்பட்டுச் சென்றனர். MK Muthu body cremated

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share