திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் தனது 72-ஆவது பிறந்தநாளை நாளை (மார்ச் 1) கொண்டாடுகிறார். MK Alagiri birthday greeting
ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர் நலத்திட்ட உதவிகள், அன்னதானம், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இன்று சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் பிறந்தநாள் விழாவில், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்திற்கு சென்ற அவரது அண்ணனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி, சால்வை அணிவித்து ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். அழகிரியின் மூத்த மகள் கயல்விழியின் மகன் இன்பநிதியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா உடனிருந்தார்.
ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து அவர் ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்து ஒதுங்கியிருந்தார். அழகிரியின் மகன் துரைதயாநிதி வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அழகிரியிடம் துரை தயாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இந்தநிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்டாலின், அழகிரி சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. MK Alagiri birthday greeting
