கிச்சன் கீர்த்தனா: காய்கறிக் குழம்பு

Published On:

| By Selvam

Mixed Vegetable Sambar

காய்கறிகளின் விலை அதிகரித்து இருக்கும் நிலையில் சிலர் சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றால் எல்லா காய்கறிகளையும் மொத்தமாக வாங்கி ஃப்ரிட்ஜில் அடுக்கி வைத்திருப்பார்கள். ஆனால் எதை, எப்போது, எப்படிச் செய்வது என்ற குழப்பத்தில் இருப்பார்கள். இந்த நிலையில் வீட்டில் உள்ள காய்கறிகளைப் பயன்படுத்தி சுவையான, சத்தான இந்த காய்கறிக் குழம்பு செய்து அசத்தலாம்.

என்ன தேவை?

கேரட் – ஒன்று
வாழைக்காய் – ஒன்றில் பாதி
கத்திரிக்காய் – ஒன்று
முருங்கைக்காய் – ஒன்றில் பாதி
பெரிய வெங்காயம் – ஒன்று
உருளைக்கிழங்கு – ஒன்று

அரைக்க…

தேங்காய் – ஒன்றில் பாதி (துருவிக் கொள்ளவும்)
சின்ன வெங்காயம் – 5
பூண்டு – 2 பல்
இஞ்சி – ஒரு துண்டு
மல்லித்தூள் ( தனியாத்தூள் ) – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறி மசாலாத்தூள் – முக்கால் டீஸ்பூன்
கசகசா – 2 டீஸ்பூன்

தாளிக்க…

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – அரை டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு

எப்படிச் செய்வது?

காய்களை மீடியம் சைஸில் நறுக்கிக்கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு, இத்துடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைச் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் உப்பு, அரைத்து வைத்துள்ள விழுதை தேவையான அளவு தண்ணீரில் கரைத்துச் சேர்க்கவும். காய்கள் வேகும் வரை அடுப்பில் வைத்து வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: மத்தி மீன் குழம்பு

கிச்சன் கீர்த்தனா: மட்டன் முருங்கைக்கீரை சூப்

பாரிஸ் இதுக்கும் ஃபேமசா? அப்டேட் குமாரு

நிர்மலா சீதாராமனை சந்தித்த கனிமொழி 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share