பருவநிலை மாற்றத்துக்கேற்ப ஊட்டச்சத்து கொண்ட உணவுகள் மிக அவசியம். அந்த வகையில் ஊட்டச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பிய இந்த மல்ட்டி ஃப்ரூட் சாலட்டை செய்து சுவைக்கலாம். இது குழந்தைகள் விரும்பும் சாலட்டாகவும் இருக்கும்.
என்ன தேவை?
ஆப்பிள் – ஒன்று
அன்னாசிப்பழம் – 2 ஸ்லைஸ்
ஆரஞ்சு சுளைகள் – 4
சின்ன மாம்பழம் – ஒன்று
கறுப்பு அல்லது பச்சை திராட்சை – அரை கப்
சர்க்கரை – தேவைக்கேற்ப
வெனிலா ஐஸ்க்ரீம் – ஒரு கப்
டூட்டி ஃப்ரூட்டி – சிறிதளவு
எப்படிச் செய்வது?
பழங்களை நன்கு கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். சர்க்கரையை லேசாக பாகு காய்ச்சவும். அகலமான பவுலில் நறுக்கிய பழங்களை நிரப்பி, மேலே சர்க்கரைப்பாகை ஊற்றவும். அதன்மேல் வெனிலா ஐஸ்க்ரீமை பரப்பி, டூட்டி ஃப்ரூட்டியைத் தூவிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சின்ன வெங்காய குழம்பு
கிச்சன் கீர்த்தனா: பனானா ஐஸ் ஷேக்
IPL 2024 : கடைசி ஓவரில் பதற வைத்த உனத்கட்… த்ரில் வெற்றி பெற்ற ஹைதராபாத்!
ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடி வசூலா..? மாஸ் காட்டும் ஜெயம் ரவி