ஹெல்த்தியாகவும் இருக்க வேண்டும்… டேஸ்ட்டியாகவும் இருக்க வேண்டும்… இதுதான் பலரின் விருப்பமும்கூட. இந்த நிலையில் இந்த மிக்ஸ்டு ஃப்ளவர் சூப் கம் கிரேவி, சத்தானதாகவும் சுவையாகவும் இருக்கும் என்பதுடன் சூப் ஆகவும் அருந்தலாம்… கிரேவியாகவும் பயன்படுத்தலாம்.
என்ன தேவை? Mixed Flower Soup
முருங்கைப்பூ, ஆவாரம்பூ, செம்பருத்திப்பூ – தலா அரை கப்
பாசிப்பருப்பு – கால் கப்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது? Mixed Flower Soup
பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள், சுத்தம் செய்த முருங்கைப்பூ, ஆவாரம்பூ, செம்பருத்தி பூ, தேவையான நீர் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். வெந்த பருப்புக் கலவையை கடாயில் போட்டு ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, நீரை வடிகட்டி எடுத்து… அதனுடன் மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்தால்… சூப் ரெடி.
கிரேவியாக வேண்டுமென்றால், தண்ணீர் குறைவாக சேர்த்து… மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி கலந்து கூட்டு போல் செய்து சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.