லட்டு என்றால் இனிப்பு பண்டம் என்று ஒதுக்கியவர்களுக்கு சத்தான இந்த முப்பருப்பு லட்டு செய்து கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்களுக்கு மிக மிக ஏற்றது இந்த லட்டு.
என்ன தேவை? Mixed Dal Laddu
கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தோலுடன் கூடிய உளுத்தம்பருப்பு – தலா ஒரு கப்
சர்க்கரை – 3 கப்
நெய் – 2 கப்
டூட்டி ஃப்ரூட்டி, முந்திரிப்பருப்பு – தேவையான அளவு
பால் பவுடர், குளுக்கோஸ் பவுடர் – தலா கால் கப்
ஏலக்காய்த் தூள் – ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது? Mixed Dal Laddu
வெறும் வாணலியை அடுப்பில் வைத்து கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக வாசனை வரும் வரை வறுத்து, ஆறவிட்டு, பொடி செய்யவும். இதனுடன் பொடித்த சர்க்கரை, டூட்டி ஃப்ரூட்டி, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, பால் பவுடர், குளுக்கோஸ் பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். பிறகு நெய்யைக் காய்ச்சி அதில் ஊற்றிக் கலந்து, உருண்டைகளாகப் பிடிக்கவும்.