மேற்சொன்ன தலைப்பை வாசித்ததும், ‘யாரு இந்த மிதிலா பால்கர்’ என்று கேட்பவர்களே அதிகம். மிதிலா பால்கர் இந்தி, மராத்தி திரைப்படங்களில் நடித்தவர். அஸ்வத் மாரிமுத்து இயக்கிய ’ஓ மை கடவுளே’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ரித்திகா சிங் பாத்திரத்தில் நடித்தவர். கிட்டத்தட்ட 32 வயதாகிறது. ஆனால், இப்போதும் ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ ஜெனிலியா போலத் திரையில் தோன்றி வருபவர். இந்த விஷயங்களே மிதிலாவின் சிறப்புகளைச் சொல்லிவிடும். Oho Enthan Baby First Glimpse
அது மட்டுமல்லாமல், ‘பில்டர் காபி’ என்ற பெயரில் சுமார் பத்தாண்டுகளுக்கு முன் துருவ் செகல் உடன் இணைந்து இவர் இடம்பெற்ற வீடியோக்கள் தான் இன்று யூடியூபில் வரும் ‘காதல் கமகமகம’க்களுக்கு முன்னோடி. ஒரு காதல் ஜோடியின் அன்றாட வாழ்வில் நிகழ்கிற கலாட்டாக்களை காட்டின இந்த வீடியோக்கள். Oho Enthan Baby First Glimpse
பிற்பாடு ’லிட்டில் திங்க்ஸ்’ என்ற பெயரில் இது நெட்ப்ளிக்ஸில் வெளியானது. நான்கு சீரிஸ்களை கண்டது. Oho Enthan Baby First Glimpse
ஆக, மிதிலா நடித்த ஏதோ ஒரு காட்சிப்பதிவைக் கண்டவர்கள் கூட ‘தமிழில் இவர் நடித்திருக்கிறாரா’ என்ற கேள்வியைச் சிந்திப்பது இயல்பு.
அப்படிப்பட்டவர்களுக்கு ‘ஆமாம்’ என்று பதிலளித்திருக்கிறது ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் முதல் பார்வை. அவர் தமிழ் சினிமாவுக்கு வருவதை அறிவித்திருக்கிறது.

விளம்பரப்பட இயக்குனரான கிருஷ்ணகுமார் ராம்குமார் இப்படத்தினை இயக்கியிருக்கிறார். ‘பைவ்ஸ்டார்’, ‘திருடா திருடி’, ‘அறிந்தும் அறியாமலும்’ படங்களில் நடித்த அதே கிருஷ்ணாதான் இவர். இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார்.
இதில் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா நாயகனாக அறிமுகம் ஆகிறார். ஆக, படத்தைத் தயாரித்திருப்பது விஷ்ணு விஷால் என்று தனியே சொல்ல வேண்டிய தேவையில்லை.
‘சார், நீங்க ஒரு லவ் ஸ்டோரி கேட்டீங்கள்ல சார், அது ரெடியா இருக்கு’ என்றவாறே தொடங்கும் இந்த வீடியோ, படத்தில் நடித்த நாயகன், நாயகி முதல் அனைவரது முகங்களையும் க்ளோஸ் அப்பில் ஒரேமாதிரியான பிரேம்களில் காட்டுவதாக உள்ளது. அதுவே, ‘படம் டெக்னிகலா சவுண்டா இருக்கும் போலயே’ என்று ரசிகர்களைச் சொல்ல வைக்கிறது.
வெவ்வேறு ஹேர்ஸ்டைலில் நாயகன் ருத்ரா தோன்றுவதையே அதிகம் காட்டுகிற இந்த வீடியோ, வெவ்வேறு வயதுகளில் ஒரு இளைஞன் தன்னிடத்தில் காதலைச் சுமக்கிற கதை இது எனக் காட்டுகிறது.
நாயகி மிதிலா பால்கர் வரும் இடங்கள் குறைவு என்றாலும், ‘யார் இவர்’ என்று கேட்கும்படியாக இதில் இடம்பெற்றிருக்கிறார். படம் வந்தபிறகே, இவருக்கான வரவேற்பு பெருகுமா அல்லது ரித்திகா சிங் போல ‘ஒன் பிலிம் வொண்டர்’ ஆக மாறுவாரா’ எனத் தெரிய வரும். Oho Enthan Baby First Glimpse
அஞ்சு குரியன், மிஸ்கின், ரெடின் கிங்ஸ்லி, விஜயசாரதி, கஸ்தூரி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நம் கண்களில் தட்டுப்படுகின்றனர். இதுபோக கீதா கைலாசம், பாலாஜி சக்திவேல், சுஜாதா பாபு என்று பலரும் இதில் நடித்திருக்கிறார்களாம்.
‘ஜாலியான லவ் ஸ்டோரியா இருக்குமா’ என்று கேட்க வைத்திருக்கிறது ‘ஓஹோ எந்தன் பேபி’ முதல் பார்வை. அதற்கு ஜென் மார்ட்டின் பின்னணி இசையும் ஒரு காரணம்.
இப்படம் ஜூலை மாதம் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. ‘ஐயோ, அப்போ காலேஜ் திறந்திடுமே’ என்று பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம். ’அவங்களை குறிவச்சுதான் நாங்க வர்றோம்’ என்கிறது ‘ஓஹோ எந்தன் பேபி’ முதல் பார்வை.
Oho Enthan Baby First Glimpse


