ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கினாலும் மிட்செல் ஸ்டார்க் இந்தியாவுக்கு செல்லமாட்டார் என அவரது மேலாளர் தெரிவித்துள்ளது டெல்லி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. mitchel starc not available for balance ipl 2025
கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
அதன் காரணமாக 10 அணிகளில் உள்ள வெளிநாட்டு வீரர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே போர் நிறுத்தத்தை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் அடுத்த வாரத்தில் தொடங்கலாம் என்றும், புதிய அட்டவணை வெளியாகும் என்றும் பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியானது.
இந்த நிலையில் சொந்த நாடு திரும்பிய மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஹேசில்வுட் உட்பட ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகி வருகின்றனர்.
தற்போது மீண்டும் ஐபிஎல் தொடங்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கினாலும் டெல்லி அணிக்காக விளையாடி வரும் மிட்செல் ஸ்டார்க் இந்தியாவுக்கு செல்லமாட்டார் என அவரது மேலாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதே போன்று ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் இந்தியா திரும்புவதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

இது பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற போராடும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே வேளையில் ஸ்டார்க் விலகலால் தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு டெல்லி அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
