ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் படுகொலைத் தாக்குதலுக்கு பதிலடியாக Operation Sindoor ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்தது Operation Sindoor ராணுவ நடவடிக்கை.
இந்திய ராணுவத்தின் ‘Operation Sindoor’ நடவடிக்கைக்கு பாகிஸ்தானும் பதில் தரும் வகையில் ஜம்மு காஷ்மீர் எல்லையில் கண்மூடித்தமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் 16 அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர்.
உலக நாடுகள் இந்தியாவின் ‘Operation Sindoor’ பற்றி பேசிய அதே நாளில் உள்நாட்டிலும் பாதுகாப்புப் படையினர் ‘Operation Sankalp’ என்ற நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சத்தீஸ்கர் – தெலுங்கானா மாநிலத்தின் எல்லையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மாவோயிஸ்டுகளுக்கு எதிரானது. இந் நடவடிக்கையில் 22 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.
சத்தீஸ்கர் – தெலங்கானா மாநில எல்லையில் கர்ரேகுட்டா மலைப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே பல மணிநேர துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இந்த மோதலில் மொத்தம் 22 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாகவும் அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெறுவதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
Operation Sankalp என்ற பாதுகாப்புப் படையினரின் இந் நடவடிக்கையானது மாவோயிஸ்டுகளுக்கு எதிரானது. கடந்த ஏப்ரல் 21-ந் தேதி முதல் இந்த நடவடிக்கையை பாதுகாப்புப் படை மேற்கொண்டு வருகிறது. இதன் முதல் நடவடிக்கையில் 26 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பிராந்தியத்தில் ‘Operation Sankalp’ நடவடிக்கையை பாதுகாப்புப் படை மேற்கொண்டு வருகிறது. மொத்தம் 24,000 பாதுகாப்புப் படையினர் இந்த நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர். மத்திய ரிசர்வ் போலீஸ், சிறப்பு அதிரடிப்படை, கோப்ரா அதிரடிப்படை உள்ளிட்டவைகள் இணைந்து இந்த Operation Sankalp நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. Mission Sankalp 22 Naxals Killed
மாவோயிஸ்டுகள் இயக்கத்தின் வலிமையான பிரிவான தண்டகாருண்யா சிறப்பு கமிட்டியின் மூத்த தலைவர்களை இலக்கு வைத்தே Operation Sankalp மேற்கொள்ளப்பட்டு வருகிறது. Mission Sankalp 22 Naxals Killed
