பஹல்காமில் காணாமல்போன காவல்துறை!

Published On:

| By Minnambalam Desk

Missing police Department in Pahalgam

அஜய் கே. மிஸ்ரா Missing police Department in Pahalgam

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் 2025, ஏப்ரல் 22 அன்று கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பாலிருந்து வந்த ஐந்து பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் (பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள்) கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையில் போர் வெடித்தது. தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் பஹல்காமில் இருந்த பாதுகாப்புக் குளறுபடிகள் தொடர்பான விவாதம் இன்னும் முடியவில்லை.

ADVERTISEMENT

ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் எளிதில் அணுக முடியாத ஒரு சுற்றுலா இடத்திற்குத் தடையின்றி வரக்கூடும் என்பது பொதுப் பாதுகாப்பின் தெளிவான மீறலைக் காட்டுகிறது. நிர்வாகப் படிநிலையின் வெவ்வேறு நிலைகளில் யாருமே இதற்குப் பொறுப்பேற்றுப் பதில் சொல்லவில்லை. Missing police Department in Pahalgam

பொறுப்பு என்பது, ஒரு அதிகாரி அல்லது அமைப்பு மேற்கொள்ள வேண்டிய கடமைகளைக் குறிக்கும். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் 2019 அக்டோபரில் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. யூனியன் பிரதேசமாகத் தரமிறக்கப்பட்டது; தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இல்லாமல், லெப்டினன்ட் கவர்னர் (எல்ஜி) மூலமாக ஒன்றிய அரசாங்கம், பொது ஒழுங்கின் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. Missing police Department in Pahalgam

ADVERTISEMENT
Missing police Department in Pahalgam

புதிய ஏற்பாடுகளின் கீழ், ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்திற்கு மீண்டும் உயிர் கொடுப்பதற்கான தேர்தல் 2024, செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடைபெற்றது. இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசாங்கத்திற்குப் பொது ஒழுங்குக்கான பொறுப்புக்கூறலில் எந்தப் பங்கும் இல்லை. இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் லெப்டினன்ட் கவர்னரிடம் உள்ளது.

பொறுப்பு என்பது ஒரு நபருக்கு (அல்லது அமைப்புக்கு) உயர் அதிகார மட்டம் வழங்கிய பணியைக் குறிக்கிறது. இந்த விஷயத்தில் பொறுப்பை வழங்குவது மத்திய அரசுதான். முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் பொறுப்பு, பொதுப் பாதுகாப்பு உட்பட சில விஷயங்களுக்கு மட்டுமே. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான முதலமைச்சர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் தப்பிப் பிழைத்தவர்களைச் சந்தித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சென்றடையத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய முயன்றார். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பொது ஒழுங்கிற்குப் பொறுப்பான லெப்டினன்ட் கவர்னரோ வாயைத் திறக்கவில்லை.

ADVERTISEMENT

மத்திய உள்துறை அமைச்சர் நேரில் சென்று பதற்றமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற முயன்றார். ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் யூனியன் பிரதேச மக்களும் மத்திய அரசும் எதிர்கொள்ளும் பெரிய கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்கப்படவில்லை.

பயங்கரவாதத்தைத் தடுத்தல்

1989, டிசம்பர் 8 அன்று (ஒன்றுபட்ட) ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் வெடித்தது, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் முஃப்தி முகமது சயீத்தின் மகளும் மருத்துவருமான ரூபாயா சயீத் கடத்தப்பட்டார். அவரது விடுதலைக்கான பேரத்தில், ஸ்ரீநகரில் உள்ள பயங்கரவாதிகள் மாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து சக பயங்கரவாதிகளை விடுவிக்கக் கோரினார்கள். மத்திய உள்துறை அமைச்சரின் மகள் கடத்தப்பட்டது இந்திய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

சிறையில் அடைக்கப்பட்ட ஐந்து பயங்கரவாதிகளை விடுவித்து அவரை மீட்ட அந்த நாளிலிருந்து ஆறு நாட்கள், காஷ்மீரிலும் இந்தியாவிலும் பயங்கரவாதத்திற்கான அளவுகோலை நிர்ணயித்தன. இது பயங்கரவாதிகளுக்கு தைரியத்தை அளித்தது, அவர்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தஹாருக்குச் செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC 814ஐக் கடத்தினர். Missing police Department in Pahalgam

அன்றிலிருந்து நிலவரம் எவ்வளவோ மாறிவிட்டது. 35 ஆண்டுகளில் மாநிலத்தின் அரசியல் நிகழ்வுகள் அரசியல் அதிகாரத்தின் நிறத்தையும் மாற்றியுள்ளன. 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம், வலுவான மத்திய அரசாங்கத்தை வழங்குவதாக உறுதியளித்தது.

‘இந்திய காஷ்மீரின்’ நம்பிக்கையை மீண்டும் பெறுவது, இந்திய அரசியலமைப்பின் 370, 35A பிரிவுகளை ரத்து செய்வது, மாநிலத்தை இந்திய ஒன்றியத்துடன் முழுமையாக இணைப்பது போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைக் கைப்பற்றுவதுவரை தேசியவாதத் திட்டம் நீட்டிக்கப்பட்டது. மேற்கூறிய பிரிவுகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டில் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.

ஆனால், சுற்றுலாவுக்கும் தொழில்முனைவோர் நடவடிக்கைகளுக்கும் பாதுகாப்பான இடமாக ஜம்மு-காஷ்மீரை ஆக்குவோம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதா என்றால் இல்லை. Missing police Department in Pahalgam

மோதல் மேலாண்மை நிறுவனத்தால் பராமரிக்கப்படும் தெற்காசிய பயங்கரவாத இணையதளத்தின் தரவுகளின்படி, 2015 முதல் பயங்கரவாத இறப்புகள் பின்வருமாறு (பாஜக பதவி ஏற்ற முதல் ஆண்டைத் தவிர்த்திருக்கிறோம்): 115 (2015), 165 (2016), 220 (2017), 271 (2018). 2019இல் இது சற்றே குறைந்தது (163). ஆனால், 2020இல் மீண்டும் 232ஆக உயர்ந்தது. பாதுகாப்புப் படையினரால் பல தாக்குதல் முயற்சிகளை முறியடிக்க முடிந்தபோதிலும், 2014 முதல் பயங்கரவாத ஊடுருவல் தடையின்றித் தொடர்ந்ததையே இந்தத் தரவு குறிக்கிறது. பாதுகாப்புப் படையினரிடையே இறப்புகளும் குறைந்துள்ளன.

இருப்பினும், பயங்கரவாத அமைப்புகள் (பெரும்பாலும் பாகிஸ்தானை தளமாகக் கொண்டவை; சில உள்ளூர் பிரிவுகளும் இதில் அடங்கும்) 2019, பிப்ரவரி 14 அன்று ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் வாகனங்களில் பயணிக்கும் பாதுகாப்புப் படையினர் குழுமீது ஒரு கொடிய தாக்குதலை நடத்தியது. Missing police Department in Pahalgam

Missing police Department in Pahalgam

இந்தச் சம்பவத்தில் உளவுத்துறை தோல்வி ஒரு காரணியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவுகளை யார் மேற்பார்வையிடுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. புலனாய்வுப் பிரிவு, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு தவிர வேறு எந்தப் புலனாய்வுப் பிரிவுகளுக்கு இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டது, அவை யாருக்கு அறிக்கை அளிக்கின்றன என்னும் கேள்விகள் எழுகின்றன.

ராணுவத்திற்குச் சொந்தமாகப் புலனாய்வு வலையமைப்பு இருப்பது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில் அவர்களுக்கு அந்தப் பகுதியுடன் அறிமுகம் இருக்க வாய்ப்பில்லை. மக்களுடன் எந்த விதமான தொடர்பும் இருக்காது. மிக முக்கியமானதும் அடிப்படையானதுமான துறை மாநிலக் காவல்துறை. திரைக்குப் பின்னால் செயல்படும் வலுவான புலனாய்வுப் பிரிவை மாநிலக் காவல்துறையால் உருவாக்க முடிந்ததா?

போலீஸ் எங்கே? Missing police Department in Pahalgam

துணைநிலை ஆளுநரின் கீழ் செயல்படும் மாநிலக் காவல்துறை எங்கே இருந்தது? மாநிலத்தில் பொதுப் பாதுகாப்பையும் அமைதியையும் பராமரிக்கக் காவல்துறையைத் தயாராக வைத்திருப்பது துணைநிலை ஆளுநரின், அவரது அலுவலகத்தின் பொறுப்பல்லவா? Missing police Department in Pahalgam

எல்லைக்கு அப்பாலிருந்து அல்லது உள்ளூர் ஸ்லீப்பர் செல்களிடமிருந்து வரக்கூடிய பயங்கரவாத நடவடிக்கைகளால் எப்போதும் ஆபத்தில் இருக்கும் ஒரு மாநிலத்தில், உள்ளூர் மக்களுக்கு மட்டுமல்ல, மாநிலத்தின் பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதுகாப்பை வழங்கக் காவல்துறை அடிமட்டத்தில் செயல்பட வேண்டும். சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பதற்காகத் தகவல்களைச் சேகரித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்புவது காவல்துறையின் அடிப்படைச் செயல்பாடுகளில் ஒன்றாகும்.

Missing police Department in Pahalgam

பைசரன் பள்ளத்தாக்கில் காவல்துறையினர் இல்லை. பயங்கரவாதிகள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பாலிருந்து வந்ததாகத் தெரிகிறது. ராணுவ உளவுத்துறை இதைக் கண்டறியவில்லை. இது முதல் சறுக்கல்; பஹல்காமிலுள்ள லிடார் ஆற்றின் குறுக்கே உள்ள அதன் சுற்றுலாத் தலங்கள் ஆயுதமேந்திய போலீசாரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அப்படி இல்லாதது அடுத்த சறுக்கல். ஒரு அதிகாரியின் கீழ் போதிய அளவில் கான்ஸ்டபுலரிகள்கூட இல்லை என்பதை நமக்குக் கிடைக்கும் அறிக்கைகள் காட்டுகின்றன. Missing police Department in Pahalgam

பஹல்காம் குறித்து நடந்துவரும் விவாதங்களில், துணைநிலை ஆளுநர் தனது பொறுப்புணர்வைத் துறந்ததற்காகவோ அல்லது காவல்துறை தங்கள் பொறுப்பை நிறைவேற்றத் தவறியதற்காகவோ விசாரிக்கப்படவில்லை. பொதுப் பாதுகாப்பின் முக்கியமான நிலைகளில் உள்ள இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட வேண்டும். பாதுகாப்பில் உள்ள இடைவெளிகளை அடைக்க வேண்டும்.

அஜய் கே. மிஸ்ரா, எழுத்தாளர், அரசியல் விஞ்ஞானி. 2019-21ஆம் ஆண்டு புது தில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய் சீனியர் ஃபெலோவாகவும், தில்லி பல்கலைக்கழகத்தின் ஷாஹீத் பகத் சிங் மாலை நேரக் கல்லூரியின் முதல்வராகவும் (2018) இருந்தார். Missing police Department in Pahalgam

நன்றி: தி வயர் இணைய இதழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share