‘சீதா ராமம்’ படம் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினாக உள்ளவர் மிருணாள் தாக்கூர். தெலுங்கு, ஹிந்தி என தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் கூடிய விரைவில் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாக உள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் மிருணாள் ஹீரோயினாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் தெலுங்கில் நானிக்கு ஜோடியாக மிருணாள் நடித்துள்ள ‘ஹாய் நானா’ படம் வரும் டிசம்பர் 7ம் தேதி வெளியாக இருக்கிறது. அதேபோல் விஜய் தேவரகொண்டா நடிப்பில் ‘ஃபேமிலி ஸ்டார்’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பேசும்போது, “மிருணாள், ஒரு தெலுங்கு மணமகனைப் பார்த்து திருமணம் செய்துகொள்ள வேண்டும். ஹைதராபாத்தில் செட்டில் ஆக வேண்டும்” என்று வாழ்த்தினார்.
இதன் பிறகு, தெலுங்கு நடிகர் ஒருவரை மிருணாள் தாக்கூர் காதலிப்பதாகவும், கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் பரவி வந்தது.

இந்த தகவல் குறித்து மிருணாள் தாக்கூர் கூறியதாவது, “நான் எந்த தெலுங்கு நடிகரையும் காதலிக்கவில்லை. திருமணம் செய்துகொள்ளப்போவதும் இல்லை. அந்த விழாவில், அல்லு அரவிந்த் அவர்கள் அப்படி கூறியது நகைச்சுவைக்காக தான். அது இப்படிப்பட்ட வதந்தியாக மாறும் என்று நினைக்கவில்லை” என்று விளக்கம் அளித்து திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மிருணாள் தாக்கூர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
பாஜக தலையீடு… ஸ்டாலின் உரை புறக்கணிப்பு?: இலங்கை அரசு விளக்கம்!
