கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்கும் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நான்காவது இடத்தையே பிடிக்க முடிந்தது. தனது மோசமான தோல்விக்கு மாதவிடாய் சிக்கல்கள் தான் காரணம் என்று மீராபாய் சானு கூறியிருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர் மணித் அரோரா, ”மீராபாய் விவகாரத்திலும், மருத்துவக் குழுவின் தவறு இருக்கிறது. மாதவிடாய் ஏற்பட்டதால் என்னால் சரியாக விளையாட முடியவில்லை என்று கூறுவதெல்லாம் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியாது. மாதம்தோறும் மாதவிடாய் பிரச்சனை அவர்களுக்கு வரும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.ஆனால் அதே சமயம் மாதவிடாய் பிரச்சினையால் தான் நான் தோல்வியை சந்தித்தேன் என்று எந்த ஒரு வீராங்கனையும் இதுவரை கூறி நான் கேட்டதில்லை.
உலகில் மிகச்சிறந்த டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸ்க்கு மாதாவிடாய் பிரச்சனை ஏற்பட்டு இருக்காதா? அவர் ஒரு முறையாவது தனக்கு மாதவிடாய் பிரச்சனை ஏற்பட்டது இதனால் தான் நான் தோல்வி அடைந்தேன் என்று கூறியது உண்டா? . இதுபோன்ற சில பிரச்சனைகளை சிறந்த வீராங்கனைகள் கையாண்டுதான் வெற்றி பெற்று வருகின்றனர்.
ஒலிம்பிக் போட்டிக்காக வரி செலுத்தும் மக்களின் ஏராளமான பணத்தை அரசு செலவிடுகிறது. அப்படியென்றால் சரியான பயிற்சியாளர் குழுவையும் மருத்துவ குழுவையும் வீரர்கள் குழுவுடன் அனுப்ப வேண்டும். ஏனென்றால், உலகம் முன் நம் நாட்டு சார்பாக நமது விளையாட்டு வீரர்கள் நிற்கிறார்கள். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தொடரில் நாம் சிறந்து விளங்க உரிய நடவடிக்கையை ஒலிம்பிக் சங்கம் எடுக்க வேண்டும்” என்று டாக்டார் அரோரா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
Share Market : இந்திய நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய சிங்கப்பூர் அரசு!
’எள்ளு வய பூக்கலையே…’ பாட்டுக்குப் பட்ட கஷ்டங்கள்: மனம் திறந்த சைந்தவி