மின்னம்பலம் மற்றும் பிரைம் நைன் தமிழ் இணைந்து வழங்கிய தமிழ்நாட்டின் சிறந்த எம்பிக்களுக்கான ’டாப் எம்பிக்கள் விருது விழா’ நேற்று (மார்ச் 15) மாலை சென்னை அக்கார்டு ஹோட்டலில் நடைபெற்றது.
சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதை விஐடி பல்கலைக் கழக நிறுவனர்-வேந்தரும், தமிழியக்கத்தின் தலைவருமான கோ.விசுவநாதனிடமிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் எம்பியுமான திருமாவளவன் பெற்றார்.
சிறந்த களப்பணியாளருக்கான விருதை விஐடி பல்கலைக் கழக நிறுவனர்-வேந்தரும், தமிழியக்கத்தின் தலைவருமான கோ.விசுவநாதனிடமிருந்து தூத்துக்குடி எம்பி கனிமொழி பெற்றார்.
வாழ்நாள் சாதனையாளர் விருதினை திருநங்கை பரதநாட்டிய நடனக் கலைஞர் நர்த்தகி நடராஜிடமிருந்து
மூத்த நாடாளுமன்ற வாதியான ராஜ்யசபா எம்பி திருச்சி சிவா பெற்றார்.
நாடாளுமன்றத்தில் ஆற்றல் மிக்க குரலுக்கான விருதினை விஐடி பல்கலைக் கழக நிறுவனர்-வேந்தரும், தமிழியக்கத்தின் தலைவருமான கோ.விசுவநாதனிடமிருந்து மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் பெற்றார்.
சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதை விஐடி பல்கலைக் கழக நிறுவனர்-வேந்தரும், தமிழியக்கத்தின் தலைவருமான கோ.விசுவநாதனிடமிருந்து தென் சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பெற்றார்.
சிறந்த களப்பணியாளருக்கான விருதை மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவர் முனைவர் ஜெயரஞ்சனிடமிருந்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் பெற்றார்.
சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதை மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவர் முனைவர் ஜெயரஞ்சனிடமிருந்து தருமபுரி எம்பி டாக்டர் செந்தில் பெற்றார்.
சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதை மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவர் முனைவர் ஜெயரஞ்சனிடமிருந்து கரூர் எம்பி ஜோதிமணி பெற்றார்.
சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதை மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவர் முனைவர் ஜெயரஞ்சனிடமிருந்து தென்காசி எம்பி தனுஷ் பெற்றார்.
டெல்லியில், இந்திய அளவில் சிறந்த எம்பிக்களுக்கான விருது வழங்கும் விழாவை சில செய்தி நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் முதல் முறையாக சிறந்த எம்பிக்களுக்கான விருது வழங்கும் நிகழ்வை மின்னம்பலம் முன்னெடுத்திருக்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிறப்பாக செயல்பட்டவர்கள் யார் என்று தகுதி வாய்ந்த நடுவர்கள் வழியாக ஆராய்ந்து, சிறப்பான எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் வரதன் ஷெட்டி, மூத்த ஊடகவியலாளர் முன்னாள் தி இந்து ரீடர்ஸ் எடிட்டர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி என்று தேர்ந்த நிபுணர் குழுவினரின் ஆய்வு, அதோடு சிலருக்கு மக்கள் கருத்துகள் அடிப்படையிலும் இந்த விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
விருதுகளை மூத்த நாடாளுமன்ற வாதியும் விஐடி பல்கலைக் கழக நிறுவனர்-வேந்தரும், தமிழியக்கத்தின் தலைவருமான கோ.விசுவநாதன், மாநில திட்டக் குழு துணைத் தலைவர் முனைவர் ஜெயரஞ்சன், பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ் ஆகிய ஆளுமைகள் வழங்கினார்கள்.
தமிழ் ஊடக உலகிலும் தமிழ் அரசியல் உலகிலும் குறிப்பிடத் தகுந்த நிகழ்வாக இந்த விருது வழங்கும் விழா அமைந்தது.
தேர்வுக் குழு உறுப்பினர்களான ஏ.எஸ்.பன்னீர்செல்வன், ரவி ஐபிஎஸ், திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத், எழுத்தாளரும் கதை சொல்லியுமான பவா செல்லதுரை, விழுப்புரம் எம்பியும் விசிக பொதுச் செயலாளருமான ரவிக்குமார் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
விழாவில் விருது பெற்றவர்கள் ஆற்றிய உரைகள் மின்னம்பலம் வாசகர்களுக்கு அடுத்தடுத்த செய்திகள் வழியாக வெளிவரும்…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேந்தன்