மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர்… பட்டாசு கொளுத்துவது யார்?

Published On:

| By Kavi

2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.

இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.

ADVERTISEMENT

அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.

பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கவுசிக் போட்டியிடுகிறார்.

ADVERTISEMENT

காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்

உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்

ADVERTISEMENT

18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பரங்குன்றம்,  திருமங்கலம்,  சாத்தூர்,  சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் 

காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 45% வாக்குகளைப் பெற்று மீண்டும் விருதுநகர் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார்.

தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்

பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.கவுசிக் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன.

1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்... பட்டாசு கொளுத்துவது யார்? | Minnambalam Mega Survey 2024 | Virudhunagar

ஆக…, விருதுநகர் தொகுதியில் இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.

மின்னம்பலம் கருத்துக்கணிப்பின் முடிவுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்  minnambalam.com வலைதளத்தில்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share