மின்னம்பலம் மெகா சர்வே: காஞ்சிபுரம்… கள நாயகன் யார்?

Published On:

| By Kavi

2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.

அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரான அண்ணா பிறந்த, கோயில்கள் நிறைந்த என அரசியல், ஆன்மிகம் என இரு வகைகளிலும் முக்கியத்துவம் பெற்ற காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் யார் வெற்றி பெறப் போகிறார்? ஆய்வில் இறங்கினோம்.

இந்த தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்.பி.யான செல்வம் மீண்டும் களமிறங்கியுள்ளார்.

அதிமுக சார்பில் ராஜசேகர் போட்டியிடுகிறார்.

பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் வெ.ஜோதி வெங்கடேசன் போட்டியிடுகிறார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.சந்தோஷ்குமார் போட்டியிடுகிறார்.

களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? 

காஞ்சிபுரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் சில கேள்விகளை  முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட   6 சட்டமன்றத் தொகுதிகளான  செங்கல்பட்டு,  திருப்போரூர்,  செய்யூர் (தனி),  மதுராந்தகம் (தனி),  காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் ஆகியவற்றில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…

திமுக வேட்பாளர் செல்வம் 46% வாக்குகளைப் பெற்று மீண்டும் காஞ்சிபுரம் தொகுதியில் முன் நிற்கிறார்.

அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்

பாமக வேட்பாளர் வெ.ஜோதி வெங்கடேசன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.சந்தோஷ்குமார் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன.

1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஆக…, காஞ்சிபுரம் தொகுதியில் இந்த முறையும் செல்வம் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.

மின்னம்பலம் சர்வே முடிவுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்  minnambalam.com வலைதளத்தில்

காஞ்சிபுரம்: கள நாயகன் யார்? | Minnambalam Mega Survey 2024 | Kanchipuram | Elections 2024

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மின்னம்பலம் மெகா சர்வே: தென்காசி…. வெற்றிச் சாரல் யார் மீது?

மின்னம்பலம் மெகா சர்வே: பொள்ளாச்சியில் யார் ஆட்சி?

மின்னம்பலம் மெகா சர்வே : மத்திய சென்னை… மகுடம் சூடப் போவது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share