மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி?

Published On:

| By Kavi

2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.

இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் .ஜெகதீசன் போட்டியிடுகிறார்.

ADVERTISEMENT

திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாக தகவல்கள் வருகிற நிலையில்களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்சங்கராபுரம்கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனிபகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்…

ADVERTISEMENT

திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார்.

அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்

பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன.

1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார். 

மின்னம்பலம் கருத்துக்கணிப்பின் முடிவுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்  minnambalam.com வலைதளத்தில்

கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? | Minnambalam Mega Survey 2024 | Kallakurichi | Elections 2024

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு?

மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share