மின்னம்பலம் மெகா சர்வே: கோயம்புத்தூர்… கொங்குத் தங்கம் யாருங்ணா?

Published On:

| By Kavi

2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.

இந்த தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலாமணி ஜெகநாதன் போட்டியிடுகிறார்.

ADVERTISEMENT

திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்

களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்

ADVERTISEMENT

உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது

கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான பல்லடம்,  சூலூர்,  கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், கோயம்புத்தூர் (வடக்கு),  கோயம்புத்தூர் (தெற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்

ADVERTISEMENT

திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 36% வாக்குகளைப் பெற்று கோயம்புத்தூர் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார்.

அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 31% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்

பாஜக வேட்பாளர் அண்ணாமலை 29% வாக்குகளைப் பெறுவார் என்றும் 

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெயக்குமார் 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன.

1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஆக…, கோயம்புத்தூர் தொகுதியில் இந்த முறை கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.

மின்னம்பலம் கருத்துக்கணிப்பின் முடிவுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்  minnambalam.com வலைதளத்தில்

கோயம்புத்தூர்... கொங்குத் தங்கம் யாருங்ணா? | Minnambalam Mega Survey 2024 | Coimbatore

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மின்னம்பலம் மெகா சர்வே: ராமநாதபுரம்…சேது பூமியில் சாதிப்பவர் யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: தேனி… யார் திசையில் வெற்றிக் காற்று?

மின்னம்பலம் மெகா சர்வே: தர்மபுரி… தட்டிப் பறிப்பது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: நீலகிரி… சிகரம் தொடுவது யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share