மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்?

Published On:

| By Kavi

2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.

இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.

ADVERTISEMENT

அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார்.

சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்

ADVERTISEMENT

உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்,

ADVERTISEMENT

சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார்.

எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்

பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன.

1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.

திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? | Minnambalam Mega Survey 2024 | Dindigul | Elections 2024

மின்னம்பலம் கருத்துக்கணிப்பின் முடிவுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்  minnambalam.com வலைதளத்தில்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு?

மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?

குக் வித் கோமாளியில் இருந்து விலகும் குரேஷி?… என்ன தான்யா நடக்குது உள்ள..!

”அதிமுகவை மிரட்டி பார்க்கும் வேலை வேண்டாம்” : சிதம்பரத்தில் சீறிய எடப்பாடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share