மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்?

Published On:

| By Kavi

2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.

இந்த தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)  சார்பில் வை.செல்வராஜ் களமிறங்கியுள்ளார்.

ADVERTISEMENT

அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்த்திகா போட்டியிடுகிறார்.

சிபிஐ, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில்,  இத்தொகுதி மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்

ADVERTISEMENT

உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாகப்பட்டினம்  நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.

இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.

ADVERTISEMENT

18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது

நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருத்துறைப்பூண்டி (தனி),  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  திருவாரூர்,  நன்னிலம் மற்றும் கீழ்வேளூர் (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…

சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 49% வாக்குகளைப் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் முன்னிலை பெறுகிறார். 

அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்

பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன.

1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஆக…, நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை வை.செல்வராஜ் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.

மின்னம்பலம் கருத்துக்கணிப்பின் முடிவுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்  minnambalam.com வலைதளத்தில்

நாகப்பட்டினம் தொகுதியை கைப்பற்றப் போவது யார்? | Minnambalam Mega Survey 2024 | Elections 2024

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்?

ராம நவமிக்கு நேரில் வர வேண்டாம்: அயோத்தி அறக்கட்டளை!

மின்னம்பலம் மெகா சர்வே: பெரம்பலூர் ரேஸில் வின்னர் யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share