சமீபத்தில் ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண் ராஜ், முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜலட்சுமி, ஸ்ரீதரன், முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின், ஓய்வு பெற்ற நீதிபதி சுபாஷ், ஜேபிஆர் கல்வி அறக்கட்டளையில் இருக்கக் கூடிய டாக்டர் மரிய வில்சன் ஆகியோர் தவெகவில் இன்று (ஜூன் 8) இணைய இருப்பதாகவும், அருண் ராஜுக்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் முதன்முதலாக மின்னம்பலத்தில் இன்று காலை செய்தி வெளியிட்டிருந்தோம். minnambalam exclusive Arun Raj IRS joined tvk

அதன்படி, கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக அருண் ராஜை தவெக தலைவர் விஜய் நியமித்துள்ளார். மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜலட்சுமி, ஸ்ரீதரன், டேவிட் செல்வின்,ஓய்வு பெற்ற நீதிபதி சுபாஷ், ஜேபிஆர் கல்வி அறக்கட்டளையை சேர்ந்த டாக்டர் மரிய வில்சன் ஆகியோரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார். minnambalam exclusive Arun Raj IRS joined tvk
